அனைத்தையும் அம்பலப்படுத்தி அப்ரூவராக மாறப்போகும் சுவிஸ் தூதரக பணிப்பெண்!!

Report Print Varun in சமூகம்

தம்மால் ஏற்பட்ட சிரமத்திற்கு தாம் கவலை தெரிவித்துக் கொள்வதாக கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தில் கடமையாற்றிய பணிப் பெண்ணான ஸ்ரீயாலதா தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தின் முக்கியஸ்தகர் ஒருவருக்கு குறித்த பெண்மணி தெரிவித்திருப்பதாகவே சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற அனைத்து விடயங்கள் குறித்தும் தாம் அரச தரப்புக்கு அறிவிக்க தயார் எனவும் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்று தருமாறு அந்த பெண் அரசாங்கத்தின் முக்கியஸ்தகரிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்த விடயம் தொடர்பாக சட்டத்தில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அதில் இருந்து மீள்வதற்காக தமக்கு உதவுமாறும் சுவிஸ் தூதரகத்தில் கடமையாற்றிய பணிப் பெண்ணான ஸ்ரீயாலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இருந்தாலும் தமக்கு இச்சந்தர்ப்பத்தில் இந்த விடயம் தொர்பாக எதனையும் செய்ய முடியாது எனவும் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் அதற்கு முகம் கொடுப்பதே சிறந்தது எனவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் உதவி செய்தால் அது தமது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...