சுப்பிரமணிய பாரதியாரின் 137ஆவது ஜனன தின நிகழ்வு யாழில் அனுஷ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

சுப்பிரமணிய பாரதியாரின் 137ஆவது ஜனன தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 137ஆவது ஜனன தின நிகழ்வு யாழ்ப்பாணம் அரசடி சந்தியில் அமைந்துள்ள கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலை முன்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் குறித்த சுப்ரமணிய பாரதியார் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களும் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், முன்னாள் வட மாகாண சபையின் அவைத்தலைவர், யாழ்மாநகர முதல்வர் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...