மனித உயிர்களை பறிக்க எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Report Print Steephen Steephen in சமூகம்

மனித உயிர்களை பறிக்கவோ, மனித இனத்தை மிதிக்கவோ எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் வருடாந்த நத்தார் பக்தி பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.

அனைவரும் அபிமானத்துடன் வாழ முப்படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனித உயிர்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். தவறு செய்பவர்களில் இருந்து நல்லவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உயிர் தியாகத்தில் உயிர்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

அனைத்து மனிதர்களும் ஆத்ம கௌரவத்துடன் வாழ்வதற்காக முப்படையினருக்கு நன்றி கூறுகின்றேன். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பல உயிர்கள் இல்லாமல் போனது.

தவறான வழி நடத்தப்பட்டவர்களின் தன்னிச்சையான செயல் காரணமாக இது நடந்தது. உயிர்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எந்த தியாகத்தையும் செய்ய தயாராக வேண்டும். உயிர்களை பறிக்க எந்த சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...