இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் அவசரமாக அந்நாட்டுக்கு அழைக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

Report Print Varun in சமூகம்

இலங்கையின் சுவிஸ் தூதரக பணிப்பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து ஏற்பட்டிருக்கும் சட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவரை உடனடியாக அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை, சுவிஸ் தூதரகத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கத்தை சிரமத்துக்குள்ளாக்கும் நோக்கத்தில் குறித்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் சுவிஸ் தூதுவர் அந்நாட்டுக்கு அழைக்கபட்ட நிலையில் பிரதித்தூதுவர் இலங்கைக்கான பணிகளை முன்னெடுப்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers