யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களுக்குள் 769 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துள்ளதோடு நோய் பரம்பலும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம்காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பலஇடங்களிலும் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தாலும் வைத்தியசாலைகளில் தினமும் அதிகளவிலான நோயாளர்கள் டெங்கு நோய் சிகிச்சைக்காக்க அனுமதிக்கப்பட்டுவருவதாகவும் எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகளவிலான நோயாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...