மருத்துவர் ஷாபியால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: நீதிக்கான தொழிற்சங்க அமைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் ஷாபி சியாப்தீன் கருத்தடை சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளான தாய்மாருக்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகியவற்றை வழிநடத்துமாறு நீதிக்கான தொழிற்சங்க அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களம் இது தொடர்பாக விசாரணைகளை பக்கச்சார்பாக நடத்தியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான வழக்கு நாளைய தினம் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

Latest Offers

loading...