வவுனியாவில் சட்டவிரோதமாக போதைப்பொருளை வைத்திருந்தவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று காலை சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக போதைப்பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தனிமையில் நின்றிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போதே அவரிடமிருந்து வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 400 ஹோர்லிப் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மல்லாவியை சேர்ந்த 30 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நாளைய தினம் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...