கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகள் திறப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் நான்கு வான்கதவுகளும், ஒரு அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடுக்காமுனை பாலத்தின் மேல் நீர் பாய்ந்தோடுகின்றமையால் இவ்வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பில் நேற்று மாலையில் இருந்து இன்று வரை பெய்த அடைமழை காரணமாக பிரதேசத்திற்கு உட்பட்ட பல குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அவ்வீதிகளை அண்டிய வீடுகளிலும் நீர்தேங்கி நிற்கின்றன. வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக கிராமங்களில் உள்ள வீதிகளுக்கு அருகில் வாய்க்கால்கள் வெட்டிவிடப்பட்டப்பட்டுள்ளன.

Latest Offers

loading...