இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாது இருந்தால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணத்தின் கீழ் தங்களது தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாமல் இருப்பின் அது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு அந்த ஆணைக்குழு கோரியுள்ளது.

அரசாங்கத்தினால் தொலைபேசிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தத்தமது தொலைபேசி கட்டண பட்டியலில் குறைக்கப்பட்டுள்ளதா எனக் கவனிக்குமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.