ஓமந்தை பகுதியில் விபத்து! இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் காயம்

Report Print Theesan in சமூகம்
1074Shares

வவுனியா, ஓமந்தை - வேப்பங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகை தந்த இராணுவ வாகனம் ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து பட்டா ரக வாகனத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நான்கு இராணுவத்தினரும், பட்டாரக வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.