சஹ்ரான் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் உயிரிழப்பு

Report Print Mubarak in சமூகம்

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த 18 வயதுடைய செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல் எனத் தெரியவருகின்றது.

இவர் சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவரது சகோதரரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.