சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் வழங்குவது தொடர்பான செயலமர்வு

Report Print Yathu in சமூகம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் வழங்குவது தொடர்பான நடைமுறைகள் பற்றிய செயலமர்வு நேற்று இடம்பெற்றது.

குறித்த செயலமர்வு நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

வட மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றம் பொறுப்பான உத்தியோகத்தர்களிற்கு குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.