வெள்ளை வான் விவகாரம்! கைது செய்யப்பட்டவர்களிடம் 72 மணி நேரம் விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வான் தொடர்பிலான செய்திகளை வெளியிட்ட நபர்கள் இருவரும் இன்று குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த நபர்கள் இருவரும் முன்னாள் ஜானதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தனர். இருவரிடமும் 72 மணிநேர விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.