மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மன்னாரில் கௌரவிப்பு

Report Print Ashik in சமூகம்

மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயல்பட்ட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் காலை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார், உப்புக்குளம் விருந்தினர் மாளிகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், முருகன் கோயில் பிரதம குரு மஹா தர்ம குமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜீம்மாப்பள்ளி மௌலவி எஸ்.ஏ.அஸீம், அருட்பணி பத்திநாதன், மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.