அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

நாட்டிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் அரசி, தேங்காய், மரக்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாவை கடந்துள்ளதுடன் தேங்காய் ஒன்றின் விலை 50 - 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

மலையகத்தில் மரக்கறி விலை நூற்றுக்கு 60 வீதம் அதிகரித்துள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மரக்கறி விலையும் உயர்வடைந்துள்ளது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாவை கடந்துள்ள நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாயை கடந்துள்ளது.

பண்டிகைக் காலம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சடுதியாக விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.