மக்களின் நன்மைக்காக போக்குவரத்து அமைச்சு எடுத்துள்ள முடிவு!

Report Print Vethu Vethu in சமூகம்

பேருந்துகளில் பகல் நேரங்களில் அறவிடப்படும் கட்டணங்களை விடவும் இரவு நேரப் பயணங்களின் போது, ஓரளவுக்கு அதிகரித்த கட்டணங்கள் அறவிடப்படும் சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

இரவு நேரத்தில் செயற்படும் பேருந்து சேவை தற்பொழுது குறைவடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரவு நேரத்தில் கடமையை பூர்த்தி செய்து வீடுகளுக்கு செல்லும் பெரும்பாலானனோர் கூடுதலான தொகையை செலவிட்டு முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதாகவும் அவர் கூறினார்.

ஊழியர்களுக்கு இந்த செலவு பாரிய சுமையாக அமைந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.