சஹ்ரான் குழு உறுப்பினர் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சிறைச்சாலை அதிகாரிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் வெலிக்கடை சிறையில் வைத்து குறித்த நேற்று முன்தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்படி 13ஆம் திகதி இரவு 8.30 அளவில் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.

மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்றீரியா தொற்று காரணமாகவே இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏனைய கைதிகளுக்கும் குறித்த பக்றீரியா தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு சட்டவைத்திய அதிகாரிகள் அலுவலகம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.