மட்டக்களப்பில் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள்

Report Print Navoj in சமூகம்

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு, விநாயகபுரம், மருதநகர் போன்ற பிரதேசங்களிலே இவ்வாறு தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறித்த பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் டெங்கு நுளம்புகளும் பெருகும் அபாயம் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வாழைச்சேனை பிரதேச சபையினர் குறித்த பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.