சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் , எலிபடை பகுதியில் அனுமதி பத்திரமின்றி இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள் கெசல்கமுவ ஓயாவின் பல இடங்களில் இரவு வேளைகளில் சட்ட விரோதமான முறையில் மிகவும் சூட்சுமமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து,விசேட பொலிஸ் குழு ஒன்று சந்தேகநபர்களை பின் தொடர்ந்து சென்று சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பலங்கொடை மற்றும் பொகவந்தலாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மாணிக்கக்கல் அகழ்வில் இவர்களுக்கு பலத்த அனுபவம் இருப்பதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக ஈடுபட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நாளை திங்கட்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.