மலையகத்தில் தீவிரமாக நடைபெற்றுவரும் ஓவியம் வரையும் செயற்பாடுகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இலங்கை வேலைத்திட்டம் நாடுமுழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் நகரங்களை சுத்தப்படுத்தி ஓவியம் வரையும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மலையகத்தில் ஓவியம் வரைதலில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி நாட்டில் உள்ள நகரங்களை சுத்தப்படுத்தி ஓவியங்களை தீட்டி அழகுபடுத்தி வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு அமைவாக கடந்த ஒரு மாதமாக காலமாக நாட்டில் பல இடங்களில் இளைஞர்கள் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி வருகின்றோம்.

அந்த செயற்பாட்டில் மலையக இளைஞர்களும் இணைய வேண்டும் என்ற நோக்கில் மலையகத்தில் ஹட்டன் நுவரெலியா வீதியில் பல இடங்களில் வர்ணங்கள் தீட்டி அழகுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையகத்தினை பிரதிபலிக்கப்பட கூடிய ஓவியங்கள் எமது மக்களின் கலை, கலாசார அம்சங்கள் வாழ்வியலினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. நாட்டின் ஒரு சாராரை மாத்திரம் பிரதிபலிக்கும் ஓவியங்கள் ஏனைய சமூகத்தினை ஒதுக்கியுள்ளது என்ற சிந்தனையிலிருந்து மாற்றப்பட்டு இது எமது நாடு என்ற எண்ணத்தினை தோற்றுவிக்கும்.

எனவே ஓவியங்கள் அனைத்து மக்களின் கலாசார, சமூக, வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த செயற்றிட்டத்தில் ஒத்துழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் இதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.

இச் செயற்றிட்டத்தின் மூலம் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் ஒற்றுமையாக செயற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க விடயமாகும். இது மலையக இளைஞர்களின் மறைந்து கிடக்கும் கலைத்திறமையினை வெளிப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைவதுடன் எதிர்கால இளம் சமூதாயத்திற்கும் ஒரு முன் உதாரணமாக அமைகின்றது.

இவ்வாறான செயப்பாடுகள் மூலம் சமூக நலன் சார்ந்த விடயங்களில் இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைவதுடன் மலையகப்பகுதியில் சந்தர்ப்பம் கிடைக்காமல் முடங்கியுள்ள இளைஞர், யுவதிகளுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...