இருட்டில் இடம்பெற்ற வவுனியா ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று இருட்டில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டம் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தர்மபால செனவிரத்திண தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கூட்டமானது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் சில நிமிடங்கள் தாமதமாகி ஆரம்பமாகியுள்ளது.

வவுனியாவில் மின்சார திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற இருந்தவேளை மின் பிறப்பாக்கி வசதிகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருக்காமை பெரும் விசனத்தினை ஏற்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது.