நீதிமன்றுக்கு அருகில் மனைவி கொலை! கேகாலையில் சம்பவம்

Report Print Varun in சமூகம்

கேகாலை பிரதேசத்தில் தனது மனைவியை கணவர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் கேகாலை நீதிமன்றிற்கு வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலையாக சென்று கொண்டிருந்த போது நீதிமன்றின் முன்னால் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் அவரை கேகாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.