இரண்டு வலம்புரி சங்குகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, சேருநுவர பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இன்றைய தினம் சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேருவில நகர் பகுதியில் வலம்புரி வைத்திருப்பதாக இலங்கை துறைமுகத்துவாரம் கடற்படையினரினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சோதனை மேற்கொண்ட சேருநுவர பொலிஸார் இரண்டு வலம்புரி சங்குகளுடன் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சேருநுவர பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் லியனாராய்ச்சிலாகே டேவிட் ஹேமச்சந்திர, மொரவெவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றும் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கான் ஹேவகே துஷார, சிங்ஹகம பகுதியைச் சேர்ந்த பியகம ஆராய்ச்சிகே கயான் தரங்க என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers