பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும்!

Report Print Navoj in சமூகம்

பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் இடம்பெறும் போது அப்பகுதியில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி அப்கர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராயும் போது அதற்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் இவ்வாறான கூட்டங்களுக்கு சமுகமளிக்காமல் இருப்பது சிறந்த விடயமல்ல.

உரிய திணைக்களங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சமுகமளிக்கமுடியாத பட்சத்தில் அதற்கு பதிலாக பொருத்தமான ஒரு அதிகாரியை இக் கூட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

இக் கூட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் தொடர்பாகவும், வெள்ள நீரை வழிந்தோட செய்வதற்கான திட்டங்கள், வீதி புனரமைப்பு, குடிநீர் வேலைத்திட்டம், சுகாதாரம், டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதில் பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச அமைப்புக்களின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...