யாழில் பேருந்தில் மோதுண்டு முதியவர் படுகாயம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சற்றுநேரம் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தின்போது காயமடைந்த முதியவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சாரதி வேகமாக பேருந்தை செலுத்தியமையே இவ்விபத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...