முன்பள்ளி ஆசிரியைகளின் திறன் விருத்தியில் அக்கறையுடன் செயற்படும் லிபரா அமைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளின் திறன் விருத்தியிலும் வாழ்வாதாரத்திலும் லிபரா அமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமையின்கீழ் வாழும் 190 பெண் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தங்களுடைய ஆரம்பப் பிள்ளைப் பருவக்கல்வி தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் மற்றும் பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களின் கற்பித்தல் திறனை விருத்தி செய்யும் திட்டத்துடன் கூடிய லிபரா முன்பள்ளி அபிவிருத்தி திட்டத்தினை லிபரா பவுண்டேசன் தனது பங்காள அமைப்பான JRSS அமைப்புடன் இணைந்து வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 138 முன்பள்ளிகளில் பணியாற்றும் மேற்படி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு உட்பட கிட்டத்தட்ட 3000இற்கும் மேற்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடை மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது போசாக்கு உணவு போன்ற பல்வேறு பட்டஉதவித்திட்டங்களை லிபரா அமைப்பு மேற்கொள்வதோடு, கடந்த ஒருவருட கற்கை நெறி மற்றும் பயிற்சிகளைப் பொற்றுக்கொண்ட 190 வடக்கு கிழக்கிலுள்ள பெண் ஆசிரியைகளுக்கான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த சான்றிதழ் வழங்கும் வைபவம் “இனி 2019” எனும் தொனிப்பொருளில் இன்று முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அத்தோடு பல்வேறுபட்ட திறமைகளைக் கொண்ட முன்பள்ளி ஆசிரியைகள் அந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதோடு, வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள முன்பள்ளிசார் சமூகம் மற்றும் அரச அமைப்புக்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...