புதிய வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்பு

Report Print Theesan in சமூகம்

வன்னி மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று தனது அவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

மாலம்போ மேல் மாகாணத்தை சேர்ந்த பொலிஸ் சேவையில் 37வருடம் சேவை புரிந்த றொகான் ஜே சில்வா இன்று பிற்பகல் ஊடகங்களை தவிர்த்து கொண்டு வன்னி மாவட்டத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

அரச தலைவராக கோட்டபாய தெரிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை எவ்வித ஆரவாரமின்றியும் வன்னி மாவட்டத்தின் 26ஆவது பிரதிப் பொலிஸ்மா அதிபராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 1982ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்ட றொகான் ஜே சில்வா வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்துள்ளார்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அனுரா அபேயவிக்கிரம கடந்த அரச தலைவர் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இடைவெளியாக காணப்பட்ட வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு இன்று புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

Latest Offers

loading...