சுவிஸ் தூதுவராலயத்தின் பணிப்பெண்ணுக்கு எதிராக அவரது சிநேகிதி வாக்குமூலம்!

Report Print Varun in சமூகம்

கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் சுவிஸ் தூதுவராலயத்தின் பணிப்பெண் குறிப்பிடும் எந்தவொரு சம்பவமும் தனது வீட்டில் இடம்பெறவில்லை என அவரது சிநேகிதியான ஆசிரியை ஒருவர் இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பம்பலபிட்டி பல்மாஹிரா அடுக்குமாடி வீட்டுக் கட்டிடத் தொடரில் வசிக்கும் தமது சிநேகிதியான ஆசிரியை ஒருவரின் இல்லத்தில் வைத்தே கைகளிரண்டையும் கட்டி தம்மை தாக்கிதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் சுவிஸ் தூதுவராலயத்தின் பணிப்பெண் குறிப்பிட்டிருந்தார்.

அந்த விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு, சுவிஸ் தூதுவராலயத்தின் பணிப்பெண்ணின் சிநேகிதியிடம் இன்று விசாரணைகளை முன்னெடுத்தது. அதன் போதே அந்த பெண்மணி இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபோல பல்மாஹிரா அடுக்குமாடி வீட்டுக் கட்டிடத் தொடரின் பாதுகாப்பு அதிகாரியிடமும் குற்றப்புலனாய்வு பிரிவு இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்போது குறித்த சுவிஸ் தூதுவராலயத்தின் பணிப்பெண் குறிப்பிடும் தினத்தில் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீட்டுக் கட்டிடத் தொடரில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து சீசீடிவி கெமராக்களின் காணொளிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அங்கு அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும், விசேடமான எவரும் அங்கு வருகை தந்தமைக்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் ,குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தவிர அவரது உடம்பில் தாக்கப்பட்டதற்கான எந்தவித காயங்களோ, தழும்புகளோ கிடையாது எனவும், பாலியல் துன்புறுத்தல்கள் செய்யபட்டதற்கான தடயங்கள் இல்லை எனவும் நீதிமன்ற வைத்திய அதிகாரி வழங்கியுள்ள வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...