சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி ஆகியோர் தொடர்புப்பட்டதாக கூறப்படுவது தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை மன்றுக்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவின் மீதே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

இன்றைய நீதிமன்ற அமர்வின்போது பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது சுட்டிக்காட்டல் ஒன்றை முன்வைத்த நீதிவான், பாட்டலி சம்பிக்கவோ அல்லது அவரது சாரதியோ இந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதன்போது தமது கருத்தை முன்வைத்த சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணி குணரட்ன வன்னியநாயக்க,

“2016ம் ஆண்டு இடம்பெற்ற இந்த விபத்தில் தொடர்புடையவராக முன்னாள் அமைச்சரின் சாரதி இனங்காணப்பட்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும் குற்றத்தடுப்பு துறையினர் மீது இந்த விசாரணைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று இரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட்டவர்கள் வழக்கில் தொடர்புடைய சாரதி அவரது மனைவி, ஒன்றரை வயது குழந்தை ஆகியோரை காலியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கடத்திச்சென்றதாக சட்டத்தரணி முறையிட்டார்.

எனினும் இதனை மறுத்த காவல்துறை அதிகாரி நெவில் டி சில்வா, விசாரணையின் நிமித்தம் அவர்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே பத்தரமுல்லைக்கு அழைத்து வரப்பட்டதாக குறிப்பிட்டார்.

Latest Offers

loading...