வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் ஆவா குழுவின் துண்டுபிரசுரங்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் தொடர்பான வழக்கு எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த, இமானுவேல் தர்சன் என்னும் ஊடகவியலாளர், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீதிகளில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்துச்சென்று தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வவுனியாவில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீதிகளில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்துச்சென்று தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு தவணைக்காக குறித்த ஊடகவியலாளர் வவுனியா நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் எதிர்வரும் வருடம் ஐந்தாம் மாதம் 16ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் இமானுவேல் தர்சன் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி தயாபரன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...