இரணைமடுக் குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

Report Print Suman Suman in சமூகம்

இரணைமடுக் குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன.

குறித்த இரு வான் கதவுகளும் 6 அங்குலம் அளவில் திறந்து நீர் வெளியேற்றபட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றபட்டது.

தற்பொழுதும் இரணைமடுக் குளத்தின் நீர் மட்டமானது 35 அடி 10 அங்குலம் அளவில் காணப்படுவதால் தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாகவே இன்றைய தினம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டன.

படங்கள் - யது

Latest Offers

loading...