வைத்தியசாலையில் மக்கள் அவஸ்தைப்படுவதைக் கண்ட ஜனாதிபதி! உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவு

Report Print Vethu Vethu in சமூகம்

களுபோவில வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் நுழைவாயில்களில் நோயாளர்களை பார்ப்பதற்கு வரும் உறவினர்கள் உரிய நேரம் வரும் வரை அங்கேயே காத்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கடுமையான வெயிலுக்கு மத்தியில் அமர்வதற்கு இடமின்றி பெரும் நெருக்கடிகக்கு முகங்கொடுக்கின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணி ஒன்றிக்காக வைத்தியசாலை ஊடாக சென்ற போது இதனை அவதானித்துள்ளார்.

உடனடியாக, தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்வுக்கு இது தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, வைத்தியசாலை இயக்குனர் மற்றும் சுகாதார அமைச்சின் கட்டட பிரிவு அதிகாரிகள் இது தொடர்பில் ஆராய்வதற்காக களுபோவில வைத்தியசாலைக்கு சென்று கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் பாதுகாப்பான முறையில் அமரும் வகையில் கொட்டகையும் ஆசனங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...