காற்றலைத் திட்டத்திற்கு எதிராக சாவகச்சேரியில் மக்கள் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

மறவன்புலவு காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்னால் அப்பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறவன்புலவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் காற்றாலை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அப்பகுதி மக்களினால் தமது குடியிருப்புக்கு அண்டிய பகுதிகளில் காற்றாலைகள் அமைக்க வேண்டாம் என்று கூறி, அப்பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிய சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்னால் மறவன்புலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Latest Offers

loading...