அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பியோட்டம்! பொலிஸார் தேடுதல்

Report Print Sumi in சமூகம்

யாழ். அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் விசுவலிங்கம் கிருபாகரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் ஒரு ஜேசிபி வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஏனைய சந்தேக நபர்கள் தப்பியேடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Offers