குறிஞ்சாக்கேணி பாலத்தினை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - குறிஞ்சாக்கேணி பாலத்தின் இரு பகுதி இடிந்து விழுந்துள்ள காரணத்தால் போக்குவரத்து செய்வதில் பெரும் இடையூறுகளை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவின் மத்திய புள்ளியில் அமைய பெற்றுள்ள இப்பாலம் கிண்ணியா நகர சபையையும் , கிண்ணியா பிரதேச சபையையும் பிரிக்கின்ற எல்லையாக காணப்படுகின்றது.

குறிஞ்சாக் கேணி பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் வீதித் தடை போடப்பட்டும் மக்கள் அச்சத்துக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். இப்பாலத்தினூடாக நாளாந்தம் 1000 மேற்பட்ட பொதுமக்கள் பிரயாணம் செய்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , அரச ஊழியர்கள் , வியாபாரிகள், நோயளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் என பலர் இப்பாலத்தையே பிரதான வீதியாக பயன்படுத்தி வருகின்றனர்

45 வருடங்கள் பழமை வாய்ந்த இப்பாலமானது 10 வருடங்களுக்கு மேல் பழுதடைந்த நிலையில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிகள் குறித்த பாலத்தினை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...