ஐவருடன் மாயமான படகு! தீவிர தேடுதல் நடவடிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

ஐந்து மீனவர்களுடன் காணாமல் போனதாக கூறப்படும் படகை தேடும் பணிகள் பரந்தளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பைச் சேர்ந்த இந்த படகு 2019 டிசம்பர் 10ம் திகதி முதல் காணவில்லை என்று முறையிடப்பட்டிருந்தது. எனினும் இதுவரை அது குறித்து தகவல்கள் எவையும் வெளியாவில்லை.

கவிஷா துவ என்ற கப்பலில் இருந்து டிசம்பர் 10ம் திகதிக்கு பின்னர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக காணாமல் போன படகில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் மாலைத்தீவு, மியன்மார் மற்றும் பங்களாதேஸ் நாடுகளுக்கும் படகு காணாமல் போனமையை பற்றி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

Latest Offers