சிலாவத்துறை கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நால்வர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

மன்னார் - சிலாவத்துறை கடற்பகுதியில் வைத்து இரண்டு ஈரானியர்களும், இரண்டு இலங்கையர்களும் நேற்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்டமையை அடுத்தே கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் நோக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையிலேயே ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...