அதிவேக நெஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளின் கட்டணங்கள் குறைப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் நாளை முதல் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறையில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் காலி மற்றும் நீர்கொழும்பு வரை பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பில் இருந்து மாத்தறை வரை செல்ல இதுவரை அறவிடப்படும் 720 ரூபாய் கட்டணத்தை 700 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

நீர் கொழும்பில் இருந்து காலி வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 630 ரூபாவில் இருந்து 600 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.