வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையை அப்பகுதிமக்கள் மடக்கிப் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா, மன்னார் வீதியில் அன்பகம் சிறுவர் இல்லம் பகுதிக்கு நேற்று இரவு 6 அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிமக்கள் பல மணிநேரம் போராடி முதலையை பிடித்து கட்டி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் காலையில் அவ்விடத்திற்குச் சென்று குறித்த முதலையை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர்.