சிவனொளிபாதமலைக்கு வருகை தந்த 14 பேர் மோப்பநாயின் உதவியுடன் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் வந்த 14 இளைஞர்கள் ஹட்டன் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின், தியகல சோதனைச் சாவடியில் வைத்து லுசி என்ற பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ், ஹெரோயின், மதனமோதகம், கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு, அவிசாவல, காலி, எல்பிட்டிய, கம்பஹா ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதினை உடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட 14 சந்தேகநபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.