கித்துல்ஊற்று பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளினால் 10 வீடுகள் சேதம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கித்துல்ஊற்று பகுதியில் நேற்றிரவு காட்டு யானைகளினால் 10 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்குள் புகுந்த யானைக் கூட்டங்கள் வீடுகளை சேதப்படுத்தியுள்ளன.

அந்தவகையில் அப்பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

வனஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் தான் இவ்வாறான யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், சீரான முறையில் யானை வேலிகள் அமைக்கப்படவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.