முகாமுக்குள் தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரர்

Report Print Steephen Steephen in சமூகம்

வெயங்கொடை இராணுவ முகாமுக்குள் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரரின் சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாவனெல்லை - உடுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இராணுவத்தினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.