நெல் விநியோகிப்பதில் புதிய முறை அறிமுகம்

Report Print Ajith Ajith in சமூகம்

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதில் கோட்டா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களே சந்தையில் விலைகளை நிர்ணயித்து வந்தனர்.

இது சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்தநிலையில் புதிய முறை அடுத்த அறுவடைக்காலத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளது.