கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டன!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6.00 மணியளவில் இந்த ஆறு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குளத்துக்கு பாதிப்புகள் ஏற்படாத விதத்தில் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யான் ஓயா நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், யான் ஓயா நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் பிரதீப் வெலிவிட கூறியுள்ளார்.