ஜனாதிபதியின் பணிப்புரை! கண்டியில் பாரிய சுவர் ஓவியம்

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இலங்கையிலேயே மிக உயரமான சுவர் ஓவியம் கண்டி நகரில் வரையப்பட்டுள்ளது.

தற்போது சுவர்களை அலங்கரிப்பதற்காக ஓவியம் வரையப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்டி கட்டுகஸ்தோட்ட நகரில் மஹவெலி கங்கைக்கு அருகில் இந்த உயரமான சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இவ்வாறு வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் 60 அடி நீளமும் 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது.

கண்டியில் இருந்து வடக்கிற்கு பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து வாகனங்களும் இந்த சுவர் ஓவியத்தை அவதானிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

மஹா சங்கத்தினர் மற்றும் பிரதேசத்தின் இளைஞர்கள், யுவதிகள், வர்த்தகர் உட்பட பலரின் உதவியுடன் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.