வவுனியாவில் சிசிரீவி விற்பனை நிலையத்தில் தீப்பரவல்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - குருமன்காட்டில் அமைந்துள்ள சிசிரீவி விற்பனை நிலையத்தில் இன்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

விடுமுறை நாளான இன்று குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த இந்நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையில் இருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.

இதனை அவதானித்த சிலர் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன், தீயணைப்பு பிரவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

விபத்தில் வியாபார நிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest Offers

loading...