போரின் வடுக்களோடும் இருதய நோயாளியான பிள்ளைகளோடும் அல்லலுறும் ஒரு குடும்பத்தின் சோகக்கதை

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்ற போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்ற போதிலும், அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் இன்னும் அந்த மக்களின் மனதில் இருந்து நீங்கவில்லை.

அந்த வகையில், நாட்டிற்காக யுத்த களத்தில் போராடி பலர் வீரச்சாவடைந்த நிலையில், இன்னும் பலர் வறுமையின் பிடியில் சிக்கி ஒவ்வொரு நொடியினையும் மரண வேதனையோடு கழித்து வருகின்றனர்.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு - மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான அசோகன் வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் என்ற காணொளி ஊடாக பகிர்ந்து கொள்கிறார். அவரின் வலி நிறைந்த சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு,

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600