பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை நீக்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

பதிவு செய்யப்படாத காரணத்தினால் பொலிஸ் காவலில் வைக்கப்படுகின்ற இலகு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் வியாபாரிகள் மற்றும் குடும்பங்களின் பாவனைக்கே இந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே இவர்களின் நன்மை கருதி இந்த நிவாரணத்தை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், பதிவு செய்தல் தொடர்பாக உள்ள சட்ட விதிமுறைகளை இவர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்தார்.

Latest Offers