வெளிநாடுகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பெண்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை பணி பெண்கள் 35 பேர் இலங்கைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்கமைய குவைத் தூதரகத்தின் வேறு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் விசேட கோரிக்கைக்கு அமைய குவைத் தேசிய தினத்திற்கு 35 இலங்கை பெண்களும் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பெண்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...