டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட ஆராய்ச்சி பிரிவினை அமைக்க நடவடிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சில் விசேட ஆராய்ச்சி பிரிவொன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாண வளாகங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கமானது அதிகமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த விசேட ஆராய்ச்சி பிரிவினை அமைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருணஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிரூபங்களை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...